5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்த வாகனங்கள்


5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்த வாகனங்கள்
x

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால், 5 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

திண்டுக்கல்

கொடைக்கானல் பகுதியில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் கடந்த ஒரு மாதமாக குவிந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி முதல் நகர் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர் இருப்பினும் நகர் மற்றும் வனப்பகுதிகளிலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் இருந்தது.

இதற்கிடையே சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பிற்பகல் 1.30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் வரை நகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதில் நனைந்த படியே சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக, நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்தன. மேலும் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story