கம்பத்தில் அடுத்தடுத்து பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்


கம்பத்தில் அடுத்தடுத்து பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்
x

கம்பத்தில் அடுத்தடுத்து பள்ளத்தில் வாகனங்கள் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேனி

கம்பம் நகராட்சியில் உள்ள காளவாசல், கிராமச்சாவடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கும் வகையில் நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கம்பம் கமிஷனர் குடியிருப்பு அருகே புதிய மெயின் பகிர்மான குழாய் ஏற்படுத்தி, அதில் இருந்து காளவாசல் பகுதி வரை குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது. இதற்காக சாலையோரத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. பின்னர் குழாய்கள் பதிக்கப்பட்டு, பள்ளங்கள் மண்ணால் மூடப்பட்டன. இருப்பினும் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன.

இந்தநிலையில் காந்திஜி பூங்கா அருகே இன்று மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்றது. அப்போது குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட மேற்பரப்பில் அந்த டிராக்டர் சென்றபோது, எடை தாங்காமல் பள்ளத்தில் சிக்கி கொண்டது. மேலும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது.

இதேபோல் பின்னால் வந்த ஜீப் ஒன்றும் சாலையோர பள்ளத்தில் சிக்கியது. அடுத்தடுத்து 2 வாகனங்கள் பள்ளத்தில் சிக்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் டிராக்டர் மற்றும் ஜீப் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது.


Next Story