வேலான்புதுக்குளம்கிராமமக்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்


வேலான்புதுக்குளம்கிராமமக்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேலான்புதுக்குளம் கிராமமக்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அக்.2-ந் தேதி திட்டமிட்டு இருந்த வேலான்புதுக்குளம் கிராமமக்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

போராட்டம் அறிவிப்பு

சாத்தான்குளம் யூனியன் நெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலன்புதுக்குளத்தில் முறையாக குடிநீர் வினியோகம் ெசய்ய வேண்டும், சாலை வசதி, பகுதிநேர ரேஷன் கடை திறக்க வேண்டும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலன்புதுக்குளம் பயணியர் நிழற்குடை முன்பு வருகிற அக்.2-ந் தேதி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

சமாதான பேச்சுவார்த்தை

இதை தொடர்ந்து நேற்று சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் ரதிகலா தலைமை தாங்கினார். இதில் யூனியன் ஆணையாளர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து, உதவி பொறியாளர் கீதா, திருச்செந்தூர் குடிநீர் வடிகால்வாரிய உதவி பொறியாளர், நெடுங்குளம் ஊராட்சித் தலைவர் சகாயஎல்பின், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் வேலன்புதுககுளம் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

கூட்டத்தில், திருசெந்தூர் உபகோட்ட குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பிரிவு சார்பில் திறன் குறைந்த மோட்டாரை மாற்றி அமைத்தும், நெடுங்குளத்தை சுற்றி வரும் கூட்டு குடிநீர் குழாயை மாற்றுவழி மூலம் விரைவில் தண்ணீர் கொண்டுவர ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன்பாக ஒரு வார காலத்திற்குள் ஊராட்சி மூலம் 1,500 லிட்டர் குடிநீர் தொட்டி அமைத்து, ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். சாலை வசதி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் அமைகக நடவடிககை எடுக்கப்படும், என அதிகாரிகள் உறுதி அளிககப்பட்டது.

போராட்டம் வாபஸ்

இதை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் வருகிற அக்.2-ந் தேதி திட்டமிட்டு இருந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.


Next Story