வேலாயுதபுரம் புனித குழந்தை தெரசம்மால் ஆலய திருவிழா தொடக்கம்
வேலாயுதபுரம் புனித குழந்தை தெரசம்மால் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே வேலாயுதபுரம் புனித குழந்தை தெரசம்மாள் ஆலய திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இரவு 7மணிக்கு ஜெபமாலையை தொடர்ந்து சோலைநகர் அருள்தந்தை மைக்கேல் ஜெகதீசு கலந்து கொண்டு ஆலய திருவிழா கொடியேற்றினார். பின்னர் திருப்பலி நடைபெற்றது. நாசரேத் பிரகாசபுரம் சலேத் ஜெரால்டு மறையுரை வழங்கினார். வருகிற 29-ந்தேதி வரை தினமும் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. வருகிற 30-ந்தேதி இரவு அன்னையின் தேர்ப்பவனி நடைபெறுகிறது. 1-ந் தேதி கொடியிறக்கம், விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
Related Tags :
Next Story