வேலாயுதபுரம் பள்ளியில்கிறிஸ்துமஸ் விழா


வேலாயுதபுரம் பள்ளியில்கிறிஸ்துமஸ் விழா
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேலாயுதபுரம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம் ஆர். சி தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தொழிலதிபர் பரஞ்சோதிசெல்வராஜ் தலைமை வகித்து பரிசுக் குலுக்கலை தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் அருள்தந்தை இருதயசாமி முன்னிலை வகித்து கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். தலைமை ஆசிரியை சேசு ராஜகுமாரி வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமைஆசிரியை லிட்டில்மேரி சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு தொழிலதிபர் வினிஷ்குமார் சார்பில் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செல்வராஜ், ராஜாத்தி, சத்துணவு அமைப்பாளர் மரிய விமலா, சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story