நகராட்சி சபா கூட்டம்


நகராட்சி சபா கூட்டம்
x

நகராட்சி சபா கூட்டம்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் நகராட்சி 20-வது வார்டில் அகலரபாளையம்புதூரில் நகராட்சி சபா கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் மு.கனியரசி தலைமையில் ஆணையாளர் ஆர்.மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வெள்ளகோவில் நகராட்சி 20-வது வார்டு பகுதியை 4 பகுதியாக பிரித்து பச்சாகவுண்டன்வலசு பகுதிக்கு சுப்பிரமணியம், அகலரப்பாளையம்புதூர் பகுதிக்கு குமரவேல், தீத்தாம்பாளையம் பகுதிக்கு கோவிந்தராஜ், தண்ணீர் பந்தல் பகுதிக்கு சண்முகம் ஆகிய நான்கு பொறுப்பாளர்களை கூட்டத்தில் அறிவித்தனர். இந்த நான்கு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை இவர்களிடம் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

‌ கூட்டத்தில் வேலை வாய்ப்பு, சாலை அமைத்தல், தெரு விளக்கு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை கோரி மொத்தம் 26 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

---

2 காலம்


Next Story