வெள்ளப்பட்டி, பழையகாயல் பகுதிகளில் பல்நோக்கு சேவை ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வெள்ளப்பட்டி, பழையகாயல் பகுதிகளில் பல்நோக்கு சேவை ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வெள்ளப்பட்டி, பழையகாயல் பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் சாகர் மித்ரா என்னும் பல்நோக்கு சேவை ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியில் சேர 1.07.22 அன்று 35 வயது நிறைவடையாதவர்களாக இருக்க வேண்டும். மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வெள்ளப்பட்டி, பழையகாயல் சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வரும் தகுதியான நபர்கள் வருகிற 20.6.23-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வடக்கு கடற்கரை சாலையில் உள்ள தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2320458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.