ரூ.67½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.67½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
x
திருப்பூர்


வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று தேங்காய் பருப்பும், வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும்,இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 156 விவசாயிகள் கலந்து கொண்டு 89 ஆயிரத்து 93 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், கொடுமுடி, ஈரோடு பகுதிகளை சேர்ந்த 16 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.84.35-க்கும், குறைந்தபட்சம் ரூ.69.05-க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.67 லட்சத்து 66 ஆயிரத்து 871-க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.


Next Story