வேலூர் விமான நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
வேலூர் விமான நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அணைக்கட்டு வடக்கு ஒன்றிய பா.ம.க. பொதுக்குழு கூட்டம் பொய்கையில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி.சிவா தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் அக்னி வேல்முருகன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன், மாநில துணைத்தலைவர் என்.டி. சண்முகம், மாவட்ட தலைவர் பி.கே.வெங்கடேசன், மாநில மகளிர் அணி செயலாளர் வரலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் நா.சசிகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அணைக்கட்டு தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொடியேற்றுதல், அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட வேலூர் விமான நிலையம் பணியை முடிக்கப்படாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். எனவே பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்கை வார சந்தையில் சுகாதார வசதி, குடிநீர், கழிப்பறை வசதி, தெரு விளக்கு வசதி, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், விரிஞ்சிபுரம் பாலாற்றில் பாலம் கட்டுவதாக ஓராண்டுக்கு முன்பு அமைச்சர் அறிவித்தார். இதற்கான எந்த முகாதாரமும் இதுவரை இல்லை. ஆகவே விரிஞ்சிபுரம் பாலாற்றின் குறிக்கே விரைந்து பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனஅறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் மாவட்டத் துணைச் செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.