வேலூர்- சித்தூர் மாவட்ட போலீசார் இணைந்து செயல்பட முடிவு
குற்ற சம்பவங்களை தடுக்கவேலூர்- சித்தூர் மாவட்ட போலீசார் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அருகில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வேலூரில் வந்து திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதும், வேலூரை சேர்ந்தவர்கள் சித்தூர் சென்று குற்ற செயல்களில் ஈடுபடுவதும் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கிறது.
இந்த குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரு மாவட்ட போலீசாரும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்பான ஆய்வு கூட்டம் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி, குற்றசம்பவங்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
Related Tags :
Next Story