வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம்


வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம்
x

வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் நடந்தது. ஊராட்சி குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார். இதில், 2021-2022-ம் ஆண்டுக்கான வரவு செலவு, 2022-2023-ம் ஆண்டுக்கான தோராய வரவு செலவு, 2023-2024-ம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு மதிப்பீடு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி, மாநில நிதிக்குழு மானிய திட்ட பொது நிதி கணக்கின் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், கணியம்பாடி, வேலூர் ஆகிய ஒன்றியங்களில் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story