வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு


வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு
x

25 ஆண்டுகளுக்கு பின்னர் வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

வேலூர்

வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1995-98-ம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் ஆறுமுகமுதலி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மேகலா முன்னிலை வகித்தார்.

இதில் பல்வேறு அரசுத்துறைகளில் உயர் பதவி வகிப்பவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்கள் தாங்கள் படித்த வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, ஒருவருக்கு ஒருவர் தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்தனர்.

நிகழ்ச்சியில் கல்லூரியில் 1970-ம் ஆண்டு முதல் படித்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் வரவழைக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லூரிக்கு கண்காணிப்பு கேமராக்கள், நிதியுதவி வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை வி.ஐ.பி. பாதுகாப்பு போலீஸ் அதிகாரியும், முன்னாள் மாணவருமான தயாளன் ஒருங்கிணைத்தார்.


Next Story