மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் வேலூர் வாலிபர் கைது
மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் வேலூர் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாலாஜா போலீசார் வி.சி.மோட்டூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த சலீம் (வயது 20) என்பதும், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
சொந்த ஊரில் வாகனங்களை திருடினால் வெளியில் தெரிந்துவிடும் என நினைத்து, ராணிப்பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாலாஜா அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த 2 மோட்டார்சைக்கிள்களை திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீமை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு துணையாக இருந்த அவருடைய நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.