வேம்படி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா


வேம்படி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
x

வேம்படி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

கரூர்

கரூர் ராயனூர் இலங்கை மறுவாழ்வு முகாமில் வேம்படி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று அமராவதி ஆற்றில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்திக்கொண்டும் திருமாநிலையூர் பகுதி வழியாக ராயனூர் கோவிலை வந்தடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பால் குடம் தீர்த்தத்தால் முத்து மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கும், வேம்பு மரத்திற்கும் அபிஷேகம் நடைபெற்று.

தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று இரவு திருவிளக்கு பூஜை மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.


Next Story