வெங்கடாபுரம் கிராமத்தை முன்னோடி கிராமமாக மாற்ற வேண்டும்


வெங்கடாபுரம் கிராமத்தை முன்னோடி கிராமமாக மாற்ற வேண்டும்
x

வெங்கடாபுரம் கிராமத்தை முன்னோடி கிராமமாக மாற்ற வேண்டும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.

வேலூர்

வேலூர்

வெங்கடாபுரம் கிராமத்தை முன்னோடி கிராமமாக மாற்ற வேண்டும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.

நுண் உரம் விற்பனை தொடக்கம்

வேலூர் வெங்கடாபுரம் கிராமத்தில் நுண் உரம் தயாரிப்பு மையம் அமைந்துள்ளது. இங்கு நுண் உரம் விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது.

கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அமுதாஞானசேகரன், வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர் கணேஷ்சங்கர், வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட்ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நுண் உரம் விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

பூமி வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகள் நடப்பட வேண்டும்‌. இரும்பு துகள்கள் சேர்ந்து வலுவான இரும்பு கம்பியாக மாற்றப்படுகிறது. இந்த இரும்புகம்பிகள் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.

எனவே அவற்றை மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும். குறிப்பாக பிளாஸ்டிக், பேப்பர், டயர் உள்ளிட்ட பொருட்களை மறுசுழற்சி செய்வதால் இயற்கை நலன் காக்கப்படுகிறது.

வீடுகளில் கிடைக்கப்பெறும் மக்கும் குப்பைகளை நாம் உரமாக பயன்படுத்தலாம். இந்த மக்கும் குப்பைகளை உரமாக மாற்ற வேண்டும்.

முன்னோடி கிராமமாக...

குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தால் கிராமம் சுத்தமாகும். நம்முடைய கிராமத்தை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தூய்மைக்காக வெங்கடாபுரம் கிராமம் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமம் முன்னோடி கிராமமாக மாற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

அதைத்தொடர்ந்து குப்பைகள் சேகரிக்கும் வாகனங்களும் தொடங்கி வைக்கப்பட்டது.

====


Next Story