வெங்கடேஸ்வரபுரம்கோவில் வளாகத்தில் புதிய மண்டபம்:கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
வெங்கடேஸ்வரபுரம் கோவில் வளாகத்தில் புதிய மண்டபத்தை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கே.வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் உள்ள அச்சம்மாள் கோவில் வளாகத்தில் புதிய மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய மண்டபத்தை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானத்தை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் வெங்கடேஸ்வரபுரம் பஞ்சாயத்து தலைவர் திணேஷ், அ.தி.மு.க. கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை அவை தலைவர் மாரியப்பன், கோவில்பட்டி ஆவின் தலைவர் தாமோதரன் மற்றும் கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், கோவில்பட்டியை அடுத்துள்ள தெற்கு திட்டக்குளம் மைதானத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் நினைவு கபடி குழு மற்றும் மணிகண்டன் நினைவு கபடி குழு சார்பில் 3-ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன்னுத்தாய் பொன்ராஜ் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் கே. பாண்டியராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி. கவியரசன், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.