கோபி வெள்ளாளபாளையத்தில் விஷ வண்டு கூடுகள் அழிப்பு
கோபி வெள்ளாளபாளையத்தில் விஷ வண்டு கூடுகள் அழிப்பு
ஈரோடு
கடத்தூர்
கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான 10-க்கும் மேற்பட்ட ஆல மரங்கள் உள்ளன.
4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கோவில் வளாகத்தில் உள்ள ஆலமரங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருப்பதை பக்தர்கள் பார்த்தனர். உடனே இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து விஷ வண்டுகளையும், அவைகள் கட்டியிருந்த கூடுகளையும் அழித்தனர்.
Related Tags :
Next Story