கோவில்பட்டியில் துணிகரம்:2 பெண்களிடம் 18 பவுன் நகை பறிப்பு


தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ேகாவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் வந்து 2 பெண்களிடம் 18 பவுன் நகைகளை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் வந்து 2 பெண்களிடம் 18 பவுன் நகைகளை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காற்றுக்காக நின்ற பெண்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி பூமா (வயது 57). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன் காற்றுக்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் மற்றும் முககவசம் அணிந்து 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று பூமா கழுத்தில் கடந்த 12¼ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பூமா சத்தம் போட்டார். வீட்டில் உள்ளவர்கள் வருவதற்குள், மர்மநபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம் மனைவி வெள்ளத்தாய் (44). இவர் நேற்று முன்தினம் ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு ஒரே மோட்டார் ைசக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று வெள்ளத்தாய் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டனர்.

வலைவீச்சு

மேலும் இந்த சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலை சேர்ந்த மர்ம நபர்களா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த நகை பறிப்பு சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story