தேனி அருகே துணிகரம்:மருந்துக்கடை உரிமையாளர் வீட்டில் 31 பவுன் நகை-பணம் திருட்டு


தேனி அருகே துணிகரம்:மருந்துக்கடை உரிமையாளர் வீட்டில் 31 பவுன் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே மருந்துக்கடை உரிமையாளர் வீட்டில் 31 பவுன் நகை-பணம் திருடுபோனது.

தேனி

மருந்துக்கடை

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி அரசு நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அகஸ்டின். இவர் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வனஜா (வயது 54). இவர் மனோதத்துவ நிபுணராக உள்ளார்.

கடந்த 11-ந்தேதி வனஜா தனது வீட்டை பூட்டிவிட்டு ஏற்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் தனது மகளை பார்க்கச் சென்றார். பின்னர் அங்கிருந்து 12-ந்தேதி நள்ளிரவில் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

31 பவுன் நகை திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். வீட்டுக்குள் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 31 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள், ரூ.90 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தன.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் வனஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மோப்பநாய் பைரவன் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி தேனி-கம்பம் மெயின்ரோடு வரை ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story