வேப்பந்தட்டை வேத மாரியம்மன் கோவில் திருவிழா


வேப்பந்தட்டை வேத மாரியம்மன் கோவில் திருவிழா
x

வேப்பந்தட்டை வேத மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் வேத மாரியம்மன் கோவில், ஆலந்துராயி அம்மன் கோவில், அடைக்களம்காத்தவர் ஆகிய கோவில்கள் உள்ளது. இக்கோவில்களில் திருவிழா நடத்துவது என விழாகுழுவினர் முடிவு செய்து கடந்த 13 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி குடி அழைத்தல் மற்றும் பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. மேலும் பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செய்து சாமி கும்பிட்டனர். தொடர்ந்து மங்கள இசையுடன் சுவாமி திருவீதி உலா ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை சென்றடைந்தது. முடிவில் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது.


Next Story