ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு..! இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு..! இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.


சென்னை,

அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை குஜராத் ஐகோர்ட்டு உறுதி செய்த நிலையில், ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

அரசியல் பழிவாங்கல் நோக்கோடு தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.

இந்த மகத்தான தீர்ப்பு இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றியாகும். இந்தியாவின் -வின் குரலாக சகோதரர் ராகுல் காந்தியின் குரல் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒலிக்கட்டும். என தெரிவித்துள்ளார்.


Next Story