பிரதமரின் கிசான் திட்டத்தில் நில ஆவணங்கள் சரிபார்ப்பு


பிரதமரின் கிசான் திட்டத்தில் நில ஆவணங்கள் சரிபார்ப்பு
x

ஆலங்குளம் வட்டாரத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் நில ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

தென்காசி

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 11 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வந்த நிலையில் தற்போது 12-ம் தவணை பணம் பெறுவதற்கு விவசாயிகள் ஈ.கே.ஒய்.சி. மற்றும் நில ஆவணங்கள் சரிபார்ப்பு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் நில ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம் நேரில் ஆய்வு செய்தார்.

உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை) ஆகியோர் மேற்கொள்ளும் நில ஆவணங்கள் சாிபார்ப்பு பணியை அந்தந்த கிராமத்தில் சென்று கள ஆய்வு மேற்ெகாண்டனர்.

உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு மற்றும் தங்கள் பெயரில் உள்ள பட்டா நகலை கொடுத்து நில ஆவணங்களை விவசாயிகள் சாிபார்த்துக் கொள்ளவும், ஈ.கே.ஒய்.சி. செய்யாதவர்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை அருகில் உள்ள சேவை மையங்களுக்கு சென்று கிசான் திட்டத்தில் இணைத்திடவும், இந்த பணியை உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் விரைந்து முடித்திடவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (திட்டங்கள்) நல்லமுத்து ராஜா உடனிருந்தார்.

ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன், துணை வேளாண்மை அலுவலர் முருகன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் மற்றும் நில ஆவணங்கள் சரிபார்ப்பு செய்ய வந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story