விவசாயிகளுக்கு மண்புழு உரம்


விவசாயிகளுக்கு மண்புழு உரம்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு மண்புழு உரம் இலவசமாக வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில், நேற்று தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் யோகம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் செங்கப்படை, புதுக்கோட்டை, ஒ.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மண்புழு உரம் வழங்கப்பட்டது. மேலும் மண்புழு உரத்தின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து, விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு யோகம் தொண்டு நிறுவனத்தின் டிரஸ்டி தமயந்தி தலைமை தாங்கினார். தனியார் சோலார் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி ஜெனார்தனன், தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் யோகேஷ் மணிராஜ் முன்னிலை வகித்தனர். மனிதவள மேம்பாடு சபரீஷ், வக்கீல் அப்துல்சமதுசேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story