பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த கலைநிகழ்ச்சி
பார்வையாளர்களை கலைநிகழ்ச்சி வெகுவாக கவர்ந்தது.
சுதந்திர தின விழாவில் நடந்த பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகள், அரசு நிதி உதவி பெறும் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், அரும்பாவூர் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் என மொத்தம் 90 பேர் தேசப்பற்று தொடர்பான கலை நிகழ்ச்சியை நடத்தினர். இதில் பெரம்பலூர் கவுதம புத்தர் சிறப்பு பள்ளியை சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது அனைவரையும் ஈர்த்தது மட்டுமின்றி, கண்களில் ஆனந்த கண்ணீரை வரச் செய்தது. அந்த மாணவர்களை கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் நேரில் அழைத்து பாராட்டியததோடு, அவர்களுடன் குழுப்புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும் யோகா பயிற்சியாளர் ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூரை சேர்ந்த பிரித்திவி ராஜன் தனது உடம்பை ரப்பர் போல் வளைத்து செய்த பல்வேறு யோகாசனங்களையும், மோட்டார் சைக்கிளில் செய்த சாகசங்களையும் அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.