பாத்திரங்கள் திருடிய வாலிபர் கைது
தஞ்சையில் வீட்டில் பாத்திரங்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
தஞ்சை கீழவாசல் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி முத்துமாலை (வயது50). இவா்கள் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகின்றனர். வீட்டின் பின்புறம் பழைய பித்தளை பாத்திரங்களை போட்டு வைத்திருந்தனர். சம்பவத்தன்று முத்துமாலை வீட்டிற்கு பின்னால் இருந்த பித்தளை பாத்திரங்களை மர்மநபர் ஒருவர் திருடி கொண்டிருந்தார். பாத்திரங்களின் சத்தம் கேட்டதும், வீட்டில் இருந்தவர்கள் திருடன், திருடன் என்று சத்தம் போட்டனர். உடனே அந்த நபர் அங்கிருந்து பாத்திரங்களுடன் தப்பி ஓட முயற்சி செய்தார். முத்துமாலை பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்த மணிகண்டன் (25) என்பதும், பாத்திரங்கள் திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து முத்துமாலை செய்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.