பணியின் போது மரணமடைந்த போலீசாருக்கு வீர வணக்கநாள் நிகழ்ச்சி


பணியின் போது மரணமடைந்த போலீசாருக்கு வீர வணக்கநாள் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பணியின் போது மரணமடைந்த போலீசாருக்கு வீர வணக்கநாள் நிகழ்ச்சி சூப்பிரண்டு மரியாதை செலுத்தினார்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி வீரமரணம் அடைந்தவர்களுக்கு

வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான வீரவணக்க நாள் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. இதில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன், துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க இன்னுயிர் நீத்த போலீசாருக்கு மரியாதை செலுத்தினர்.


Next Story