படைவீரர்களை சார்ந்தவர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம்
படைவீரர்களை சார்ந்தவர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வீர விருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் படையில் பணிபுரிபவர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வீர விருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படை வீரர்கள், படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர் குறைகள் எதுவும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து வழங்கலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் ெதரிவித்துள்ளது.
Related Tags :
Next Story