கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

உதயேந்திரம் பேரூராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற தலைவர் பூசாராணி தலைமை தாங்கினார். முகாமில் விவசாயிகளின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல் குடற்புழு நீக்கம், இலவச சினை ஊசி, சினை பரிசோதனை உள்பட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிப்பு குறித்து டாக்டர்கள் விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

முகாமில் கொல்லகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் ஆ.செல்வராஜ், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ஜெகன் மற்றும் கால்நடை மருத்துவர்கள், பேரூராட்சி அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story