கால்நடை மருத்துவ முகாம்
இட்டேரி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நீர்வள, நிலவளத்திட்டத்தின் கீழ் தாமிரபரணி உபவடிநிலப்பகுதியில் இட்டேரி கிராமத்தில் நேற்று கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. நெல்லை கால்நடை துணை இயக்குனர் தியோபிலஸ் ரோஜர் தலைமை தாங்கினார். கால்நடை டாக்டர்கள் கலையரசி, ஜான் சுபாஷ், ஆபிரகாம் ஜாப்ரி, கல்பத், பொன்மணி, முருகேசன், அயுப் அலி, சிவராமகிருஷ்ணன், மாரியப்பன், சரண்யா ஆகியோர் சிகிச்சை அளித்தனர். முகாமில் உலக வங்கி குழுவின் பல்துறை வல்லுனர்கள் பார்வையிட்டு கால்நடை விவசாயிகளுடன் கலந்துரையாடினர். கால்நடைகளுக்கு இலவச செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story