கால்நடை மருத்துவ முகாம்
பொரவச்சேரி, மஞ்சக்கொல்லை ஊராட்சிகளில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
சிக்கல்:
நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவமுகாம் நடந்தது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் அசன் இபுராகிம் முன்னிலை வகித்தார். முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை, தடுப்பூசி மற்றும் சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக கால்நடைகளை பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் சிக்கல் கால்நடை உதவி டாக்டர் லாரன்ஸ், கால்நடை மருத்துவர் பூபதி மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதேபோல் மஞ்சக்கொல்லை ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி பாஸ்கரன் தலைமை தாங்கினார்.முகாமில் கால்நடைகளுக்கு பரிசோதனை, தடுப்பூசி மற்றும் சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் ஆகியவை செய்யப்பட்டது.