கால்நடை மருத்துவ முகாம்
போளிப்பாக்கத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த போளிப்பாக்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணன் வரவேற்றார்.
இந்த முகாமில் 450-க்கும் மேற்பட்ட மாடு, ஆடுகளுக்கு தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்க மருந்து வழங்குதல், சினை ஊசி போடுதல், தாது உப்பு வழங்குதல், மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள், ஏரிபாசன தலைவர் மன்னார், கிளை செயலாளர் சரவணன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.