கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

இலுப்பூர், குருக்கத்தி ஊராட்சிகளில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர், குருக்கத்தி ஊராட்சிகளில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு மண்டல இணை இயக்குநர் டாக்டர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நடராஜன் முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடை உதவி டாக்டர்கள் பிரகாஷ், ராமச்சந்திரன், கால்நடை ஆய்வாளர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர், இதில் ஊராட்சி செயலாளர் செல்வேந்திரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஜீவா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில், 1009 கால்நடைகளுக்கு பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. சிறந்த கிடாரி கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இதேபோல், குருக்கத்தி ஊராட்சியில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் கால்நடை உதவி டாக்டர்கள் பிரகாஷ், ராமச்சந்திரன் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.


Related Tags :
Next Story