கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

பழனி அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கோரிக்கடவு ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். மானூர் கால்நடை உதவி மருத்துவர் வெங்கிடுசாமி முன்னிலை வகித்தார்.

முகாமில் 31 காளைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது. 25 கால்நடைகளுக்கு சினை பரிசோதனை செய்யப்பட்டது. கால்நடைகளுக்கு மலடு நீக்கம் செய்யும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 1,289 ஆடுகளுக்கு குடல் புழு நீக்கம் செய்யப்பட்டது. மேலும் 10 கால்நடைகளுக்கு சினை ஊசி செலுத்தப்பட்டது.

இந்த முகாமில் மொத்தம் 1,510 கால்நடைகளுக்கு பல்வேறு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல் சிறந்த 3 கலப்பின கன்றுக்குட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


Next Story