கால்நடை மருத்துவ முகாம்
கால்நடை மருத்துவ முகாம்
நாகப்பட்டினம்
கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ், உதவி இயக்குனர் அசன் இப்ராகிம் ஆகியோரின் அறிவுரையின் பேரில் வாய்மேட்டை அடுத்த தென்னடார் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவிசெந்தில் தலைமை தாங்கினார். முகாமில் 700-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், பெரியம்மை தடுப்பூசி, குடற்புழு நீக்கம் செய்தல், ஆடுகள், கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. சிறப்பான கன்றுகள் வளர்த்த உரிமையாளர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கால்நடை உதவி டாக்டர்கள் கமலப்பட்டு, சிவசூரியன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story