கால்நடை மருத்துவ முகாம்
கொரடாச்சேரி அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
திருவாரூர்
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி ஒன்றியம் கரையாபாலையூர் ஊராட்சி ஆர்பாவூர் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. திருவாரூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் சபாபதி, ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீனா கல்யாணசுந்தரம் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, தாதுப்பு கலவை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் சிறந்த கிடேரி கன்றுகளுக்கும், சிறந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் திருக்கண்ண மங்கை கால்நடை உதவி மருத்துவர் கவுரிசங்கர் மற்றும் எண்கண் கால்நடை உதவி டாக்டர் கோகிலப்பிரியா, கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story