கால்நடை மருத்துவ முகாம்
கால்நடை மருத்துவ முகாம்
நாகப்பட்டினம்
தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மண்டல இணை இயக்குனர் விஜயகுமார், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வேதமணி தலைமை தாங்கினார். முகாமில் 400-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம், பெரிய அம்மை தடுப்பூசிபோடுதல், ஆடு மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல் போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கால்நடை உதவி மருத்துவர் ஸ்ரீதர்பாபு, கால்நடை ஆய்வாளர் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story