கால்நடை சிகிச்சை முகாம்
கூத்தம்பாக்கம் ஊராட்சியில் கால்நடை சிகிச்சை முகாம் பெற்றது.
ராணிப்பேட்டை
பானாவரத்தை அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் தயாவதி ராஜாராம் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பொது மருத்துவம், அம்மைநோய் தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை செய்தல், மலட்டுத்தன்மை பரிசோதனை, சினை ஊசி போடுதல், குடற்புழு நீக்குதல், கோழிக்கழிச்சல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் தாது உப்பு, வைட்டமின் மாவு வழங்கப்பட்டதோடு சிறந்த கிடாரி மற்றும் பராமரிப்புக்காக பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
அப்போது பாணாவரம் கால்நடை உதவி மருத்துவர் மனோகரன் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story