கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்
தஞ்சை அருகே கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தஞ்சாவூர்;தஞ்சை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாஞ்சிக்கோட்டை கால்நடை மருந்தகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு கால்நடைகள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் தமிழ்ச்செல்வன் உத்தரவுப்படி நடந்த இந்த முகாமில் துணை இயக்குனர் டாக்டர் சுப்பையன், உதவி இயக்குனர்கள் டாக்டர் சையது அலி, பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் காடைகளை தாக்கும் கோமாரி, இலம்பி, பறவை காய்ச்சல், ஆட்டுக்கொல்லி நோய், பாதுகாப்பு தடுப்பூசி போடும் விதம் குறித்தும், நோய் பரவாமல் தடுப்பது குறித்தும், நோய்களின் பாதிப்புகள்குறித்தும் எடுத்துக்கூறப்பட்டன. மேலும் கால்நடை தீவனங்கள் வழங்குவது குறித்தும், பராமரிப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன. இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் செரீப், புஷ்பலதா, சரவணன் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.