33 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலைகள்


33 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலைகள்
x

ஆரணி தாலுகாவில் 33 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

தமிழக அரசால் கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாய கூலி உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, முதிர் கன்னி உதவித்தொகை உள்ளிட்ட நிவாரண உதவித் தொகைகள் பெறும் நபர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

அதன்படி ஆரணி தாலுகாவில் 23 ஆயிரத்து 738 பெண்களுக்கு சேலையும், 9 ஆயிரத்து 175 நபர்களுக்கு வேட்டியும் ஆக மொத்தம் 32 ஆயிரத்து 913 பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.

அதற்காக ஆரணி தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ள வேட்டி, சேலைகளை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வேன் மூலம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இவை அனைத்தும் அரசு அறிவிக்கும் நாட்களில் கிராம நிர்வாக அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை பெறும் நபர்கள் பெற்றுக் கொள்ளலாம் என ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி ஆகியோர் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story