கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி காப்பகத்தில் அமிலம் குடித்ததால் பரபரப்பு
கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி
கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தங்கி இருந்த காப்பகத்தில் அமிலம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 வயது சிறுமி
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் இருந்து தனியார் ஆஸ்பத்திரிகளில் கருமுட்டை தானம் என்ற பெயரில் கருமுட்டை விற்பனை நடந்த சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறுமியே புகார்தாரராக இருந்தார். இதுபற்றிய விசாரணையில், அவரை கருமுட்டை விற்பனைக்கு ஈடுபடுத்தியதாக சிறுமியின் தாயார், தாயாரின் 2-வது கணவர், புரோக்கராக செயல்பட்டவர், சிறுமியின் வயதை உயர்த்திக்காட்ட போலியாக ஆதார் அட்டை தயாரித்து கொடுத்தவர் என 4 பேரை ஈரோடு மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் இந்த வழக்கை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது.
காப்பகம்
இதற்கிடையே தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில் மருத்துவர் குழு அமைக்கப்பட்டு தனியாக விசாரணை நடந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமி கருமுட்டை விற்பனைக்கு ஈடுபடுத்தப்பட்டது மட்டுமின்றி, பாலியல் பலாத்காரத்துக்கும் உட்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. எனவே சிறுமியின் பாதுகாப்பு கருதி, ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்து கவனிக்கப்பட்டு வந்தார்.
தற்கொலை முயற்சி
இந்தநிலையில் நேற்று 16 வயது சிறுமி தங்கி இருந்த காப்பகத்தில் வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று காலை காப்பகத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற சிறுமி, அங்கு கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த அமிலத்தை எடுத்து குடித்ததாக தெரிகிறது. இதில் மயக்கம் அடைந்த அவரை காப்பக பணியாளர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் சிறுமி உயிருக்கு பாதிப்பு இன்றி மீட்கப்பட்டார்.
விசாரணை
சிறுமி தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும், சிறுமிக்கு வேறு தொல்லைகள் ஏதும் இருந்ததா? விடுதியில் பாதுகாப்பு குறைபாடு அல்லது வசதி குறைபாடுகள் இருந்தனவா ? என்ன காரணத்துக்காக அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
தைரியமான பெண்
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி கூறியதாவது:-
கருமுட்டை விவகாரத்தில் புகார் கூறிய பெண் மிகுந்த புத்திசாலி, தைரியமான பெண். எனவேதான் அவருக்கு நடந்த அக்கிரமத்தை அவர் பொதுவெளிக்கு கொண்டு வந்து, அதன் மூலம் பெற்ற தாயையே கைது செய்ய வைத்து இருக்கிறார். இந்த வழக்கில் பெற்ற தாயும், அவரது வளர்ப்பு தந்தை என்ற உறவில் இருந்த நபரும் குற்றவாளிகள் பட்டியலில் இருப்பதுடன், 2 பேரும் சிறையிலும் இருக்கிறார்கள். எனவே சிறுமிக்கு என்று நெருங்கிய, அவருக்கு ஆறுதல் கூறக்கூடிய உறவுகள் யாரும் இல்லை. இதனால் அவரது பாதுகாப்பு கருதி, அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டு உள்ளார்.
உளவியல் ஆலோசனை
மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சைல்டு லைன் அதிகாரிகள் மூலம் அவர் தொடர் கண்காணிப்பு மற்றும் அரவணைப்பில் இருந்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது. விடுதியில் தங்கி இருக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கு ஏற்படும் மனநிலைதான், இவருக்கும் ஏற்பட்டது. அப்போது மனநல ஆலோசகர்கள், அவரது இக்கட்டான சூழலை எடுத்துக்கூறி உளவியல் ஆலோசனை வழங்கினார்கள்.
ஆனால், வீட்டுக்கு போக வேண்டும் என்ற மனநிலை அவருக்கு சற்று அதிகமாகவே இருந்தது. எனவேதான், அமிலத்தை எடுத்து குடித்து இருக்கிறார். அவரது உடல் நிலையில் எந்த பிரச்சினையும் இன்றி காப்பாற்றப்பட்டு இருக்கிறார். அவரை தொடர்ந்து அதே காப்பகத்தில் வைத்திருப்பதா? அல்லது வேறு காப்பகத்துக்கு மாற்றுவதா? என்பது பற்றி சமூக நலத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். இந்த வழக்கில் தாய்-தந்தையே குற்றவாளிகளாக இருப்பதால் வீட்டுக்கு அனுப்ப முடியாது. இதுபற்றி சிறுமிக்கு புரிய வைத்து, அவருக