காரைக்குடியில் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்- பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு


காரைக்குடியில் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்

சிவகங்கை


காரைக்குடியில் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.

பணம் முதலீடு

சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஒரு தனியார் நிதி நிறுவனம் மற்றும் அதனுடன் இணைந்த 7 நிறுவனங்கள் மூலமாக பல கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் பணம் முதலீடு செய்தால் அதிகமாக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இதை நம்பி ஏராளமானவர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

இதன் பின்னர் அந்த நிறுவனம் முதிர்வு காலம் முடிந்த பின்னர் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதுடன் இது குறித்து காரைக்குடியை சேர்ந்த சந்திரா என்ற பெண் கொடுத்த புகாரின் பேரில் 49 பேர் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புகார் அளிக்கலாம்

இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் ராமநாதபுரம் பொருளாதாரம் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த நிதி நிறுவனம் மற்றும் அலுவலகம் என 23 இடங்களில் சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

எனவே இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அது தொடர்பான ஆவணங்களுடன் சிவகங்கை திருப்பத்தூர் மெயின் ரோடு நாகூர் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேரில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story