விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளியில்முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி
தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளியில்முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1997-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த ஆண்டு பயின்ற 95 மாணவிகளும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு ெசய்தனர். குடும்ப தலைவிகளாகவும், பல்வேறு பொறுப்புகளிலும் உள்ள முன்னாள் மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். முன்னாள் தலைமை ஆசிரியை கிரீடா ஐசக் முதல் தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி சைமன் வரை நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவிகள் அனைவரும், தங்களுடைய ஆசிரியைகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி ஆசிபெற்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் தாங்கள் பயின்ற வகுப்பறைக்கு சென்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் நடைபெற்றது. தங்களின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில், பள்ளி நூலகத்திற்கு ஏராளமான புத்தகங்களையும், கணினியையும் வழங்கினர். விழா முடிந்து அனைவரும் கண்ணீர் மல்க விடைபெற்றனர்.