வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
விருதுநகர் அருகே வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர்,
விருதுநகர் அப்பையநாயக்கன்பட்டி அருகே உள்ள வீரார்பட்டி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2-ந் தேதி முதல் கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. இதன் நிறைவில் கடம் புறப்பட்டு வெற்றி விநாயகர் மற்றும் நவக்கிரக தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அங்குள்ள சந்தனமாரியம்மன் கோவில் முன்பு அமைய உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வீரார்பட்டி ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story