பா.ஜ.க.வுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைந்தால் வெற்றி உறுதி: துரைவைகோ


பா.ஜ.க.வுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைந்தால் வெற்றி உறுதி: துரைவைகோ
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பா.ஜ.கவுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைந்தால் வெற்றிபெற முடியும் என்று துரைவைகோ கூறினார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பா.ஜ.கவுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைந்தால் வெற்றிபெற முடியும் என்று துரைவைகோ கூறினார்.

ஆவணப்படம்

திருச்செந்தூர் ஸ்ரீ கிருஷ்ணா தியேட்டரில் நேற்று காலை ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ குறித்த மாமனிதன் வைகோ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரைவைகோ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் வரவேற்று பேசினார். ம.தி.மு.க. துணை பொது செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அவை தலைவர் குருமத்தேயு ஜெபசிங், மாவட்ட பொருளாளர் காயல் அமானுல்லா, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் அந்தோணிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், தி.மு.க. திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கில் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன், மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன், மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கரும்பன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

வெற்றி உறுதி

கூட்டத்திற்கு பின்னர் துரை வைகோ கூறியதாவது:-

ம.தி.மு.க.வை தலைவர் வைகோ தனது பேச்சாற்றல், உழைப்பு, மக்கள் பணியால் கட்சியை 29 வருடம் நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாகத்தான் கட்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காரணம், தலைவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியவில்லை. விவசாயிகளை பாதிக்கும் பிரச்சினைகளை நாம் கையில் எடுத்து போராடுவோம். 29 வருடத்தில் முதல் முறையாக ஆளும் கட்சி கூட்டணியில் உள்ளோம். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு மக்கள் பணியே சிறந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. தற்போது தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். பா.ஜ.க.வின் தவறான சித்தாத்தங்களுக்கு எதிராக உள்ள அனைத்து இயக்கங்களும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒன்றிணைந்தால் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியை வெற்றி பெற முடியும். தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான அணியே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story