நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர்-நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை


நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர்-நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் தர்மசம்வர்த்தினி. இவர் குறித்து வாலிபர் ஒருவர் சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோக்களை வெளியிட்டு, அதனை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியை தர்மசம்வர்த்தினி கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். இந்தநிலையில் தலைமை ஆசிரியை குறித்து அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோர் நேற்று ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் மனு அளித்தனர். அதில் 'பள்ளி வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் தலைமை ஆசிரியை தர்மசம்வர்த்தினி குறித்து கீழ்த்தரமாகவும், அவரது பள்ளி பணிகளை பாதிக்கும் வகையிலும் பொய்யாக வீடியோ பரப்பி வரும் வாலிபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.


Next Story