ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தியின் கார் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள்


ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தியின் கார் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள்
x
சேலம்

:எடப்பாடி:-

எடப்பாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினர். எடப்பாடி பகுதியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகியான பி.ஏ. ராஜேந்திரன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசிய போது, அங்கு திடீரென நுழைந்த அ.தி.மு.கவினர், ஆலோசனை கூட்டத்திற்காக வைக்கப்பட்டு இருந்த அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னங்களை அகற்ற வேண்டும் என கூச்சலிட்டு அங்கிருந்த பேனர்கள் மற்றும் கொடிகளை அகற்ற முயற்சித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து நகர செயலாளர் ஏ.எம். முருகன் தலைமையிலான திரளான அ.தி.மு.கவினர் எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்து, அங்கிருந்த முக்கிய பிரமுகர்கள் வெளியேறினர். கடைசியாக வந்த பெங்களூரு புகழேந்தி காரில் ஏறி புறப்பட்டார். அவரது கார் கண்ணாடியை அ.தி.மு.கவினர் சிலர் அதிவேகமாக தட்டி தாக்க முயற்சித்தனர். சுதாரித்துக் கொண்ட புகழேந்தியின் கார் டிரைவர் விரைவாக காரை ஓட்டி அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்த வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story