ராஜகோபால சுவாமி கோவிலில் வித்யா சரசுவதி ஹோமம்
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் வித்யா சரசுவதி ஹோமம் நடந்தது.
பாளையங்கோட்டையில் வேத நாராயணா், அழகிய மன்னாா் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கல்விக்கு அதிபதியான வேதநாராயணா் அருளினால் ஆண்டுதோறும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ- மாணவிகள் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றிட வித்யா சரஸ்வதி ஹோமம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் நேற்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு காலையில் பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து கோவில் வெளி மண்டபத்தில் உற்சவா் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தாா். பெருமாள் முன் யாகசாலை அமைக்கப்பட்டு கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவ- மாணவிகளின் பெயா் நட்சத்திரம் கூறி சங்கல்பம் செய்யப்பட்டது. பின்னர் வெண்தாமரை, வெண்கடுகு, வெல்லம், நெல்லிக்கனி, பாயாசம் மற்றும் ஹோம திரவியங்கள் கொண்டு ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். யாக பூஜையில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு பேனா மற்றும் சிறப்பு வழிபாடு செய்த நெல்லிக்கனி வழங்கப்பட்டது.