விஜயதசமியையொட்டி கோவில்கள், பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகள் ஆர்வத்துடன் எழுத கற்றுக்கொண்டனர்.
விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகள் ஆர்வத்துடன் எழுத கற்றுக்கொண்டனர்.
ஆயுத பூஜை
நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கடந்த 9 நாட்களாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல ஊர்களில் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து மக்கள் வழிபட்டனர். 9-ம் நாளான நேற்று முன்தினம் ஆயுத பூஜை விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஏராளமானோர் தங்களின் வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும், சரஸ்வதி படங்களை வைத்து தேங்காய், பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை படையலிட்டு வழிபட்டனர். மேலும், கல்வி மற்றும் தொழிலுக்கு உதவும் புத்தகங்கள், கருவிகள், எந்திரங்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கும் சந்தனம், குங்குமமிட்டு ஆயுத பூஜையை உற்சாகமாக கொண்டாடினர்.
வித்யாரம்பம்
நவராத்திரியின் 10-வது நாளான நேற்று விஜயதசமி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. விஜயதசமி நன்னாளில் கல்வி, கலைகள், தொழில்கள் என எது தொடங்கினாலும் வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை. குறிப்பாக கல்விக்கு உகந்த நாளான நேற்று கல்வியை தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதையொட்டி குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவில்கள் மற்றும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்துச்சென்று, அவர்களின் கையைப்பிடித்து, பரப்பி வைத்திருக் zகும் நெல்லில் `அ' என்று எழுத கற்றுக்கொடுத்து எழுத்தறிவை தொடங்கினர். மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புதிய வகுப்புகள் தொடக்கம் உள்ளிட்டவையும் நேற்று நடைபெற்றது.
உத்தமர்ேகாவில்
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே மும்மூர்த்திகள் தலமான உத்தமர்கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பிரம்மா சன்னதி அருகே சரஸ்வதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத்தொடர்ந்து சரஸ்வதிக்கு முன்பு குழந்தைகளுடன் அமர்ந்த பெற்றோர்கள் இலையில் சிறிது நெல்லை பரப்பி குழந்தையின் கல்வி எந்த குறையும் இன்றி பரிபூரணம் அடைய துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் நெல்லில் எழுந்தருள வேண்டி பிரார்த்தனை செய்தனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து வழிபாடு செய்தனர்.