இயற்கை அழகை கண்டு ரசிக்க களக்காடு தலையணையில் பார்வை மாடம் மீண்டும் திறக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
தலையணையில் இயற்கை அழகை கண்டு ரசிக்க பார்வைமாடம் மீண்டும் திறக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்
களக்காடு:
தலையணையில் இயற்கை அழகை கண்டு ரசிக்க பார்வைமாடம் மீண்டும் திறக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தலையணை
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணைக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன், மோட்டார் சைக்கிள்களில் வந்து செல்கின்றனர். அங்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளிடம் நபர் ஒருவருக்கு ரூ.40 வீதம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தலையணையில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள பூங்காவிலும் அமர்ந்து பொழுதை கழிக்கின்றனர். தலையணையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், கடந்த 14.3.1986 அன்று பார்வைமாடம் கட்டப்பட்டது. சுமார் 30 அடி உயர பார்வைமாடத்தின் மீது நின்று சுற்றுலா பயணிகள் இயற்கை அழகையும், வனவிலங்குகளையும் கண்டு ரசித்தனர்.
மீண்டும் திறக்கப்படுமா?
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு களக்காடு தலையணையில் உள்ள பார்வைமாடத்துக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு செல்வதற்கான பாதையும் மூடப்பட்டது.
இதனால் தலையணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பார்வைமாடத்துக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே களக்காடு தலையணையில் காட்சிப்பொருளான பார்வைமாடம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.