ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை


ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை
x

திருவண்ணாமலை ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவின் பால் குளிரூட்டும் நிலையம்

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் நேற்று ஆவின் துறையை சார்ந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இங்கு உள்ள அதிகாரி ஒருவர் லிட்டர் கணக்கில் பால் முறைகேடு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்ததாக தகவல்கள் பரவியது.

இதுகுறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஆவின் துறையில் உள்ள விஜிலென்ஸ் அதிகாரிகள் மூலம் அவ்வப்போது ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெறும்.

அதன்படி நேற்று முன்தினமும், நேற்றும் அதிகாரிகள் இங்கு வந்து ஆவணங்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இது வழக்கமாக நடைபெறும் சோதனை தான். எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

பரபரப்பு

அதிகாரிகள் சோதனை செய்த தகவல் பரவியதால் திருவண்ணாமலையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


Next Story